எட்டியம்மன் கோவில் திருவிழா
மாம்பாக்கத்தில் எட்டியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை
கலவையை அடுத்த மாம்பாக்கத்தில் உள்ள எட்டியம்மன் கோவிலில் 28-ம் ஆண்டு மகா திருவிழா நடைபெற்றது. ஊர் நன்மைக்காகவும், கால்நடை, பொதுமக்கள் நோயின்றி வாழவும் விவசாயிகள் விளைந்த நெல்மணியை கொண்டு அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று காலையில் ஊர் பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் பால்குடத்துடன் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
மாலையில் அம்மன் வீதிஉலா நடந்தது. பக்தர்கள் நேர்த்தி கடனாக அளகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி வந்து அம்மனுக்கு மாலை அணிவித்தல், சொற்பொழிவு நடைபெற்றது. இரவில் நாடகம் நடந்தது. இவ்விழாவில் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
Related Tags :
Next Story