எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் காலிப்பணியிடம் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்


எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் காலிப்பணியிடம்   விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் காலிப்பணியிடம் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் காலிப்பணியிடம் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் ஆய்வு

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று கோவில்பட்டிக்கு வருகை தந்தார். காலையில் கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளம் பகுதியில் அமைச்சர் சுமார் 15 கி.மீ. தூரம் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது திடீரென்று எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்த மருத்துவமனையில் உள்ள வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். அப்போது மருத்துவமனையில் டாக்டர்கள், ெசவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் காலியிடம் நிரப்பப்படாமல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து அமைச்சர் நலம் விசாரித்தார்.

காலிப்பணியிடம் நிரப்பப்படும்

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த அமைச்சர், அங்கு வைக்கப்பட்டு இருந்த வருகைப்பதிவேட்டில், இந்த மருத்துவமனையில் டாக்டர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட காலிபணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுதினார்.

இந்த ஆய்வின் போது கோவில்பட்டி நகரசபை தலைவர் கருணாநிதி, எட்டயபுரம் பேரூராட்சி தலைவி ராமலட்சுமி சங்கரநாராயணன், கோவில்பட்டி மருத்துவ பணிகள் துணை இயக்குனர் போக்ஸோ ராஜா மற்றும் அதிகாரிகள், டாக்டர்கள், ெசவிலியர்கள் உடனிருந்தனர்.

பின்னர் கோவில்பட்டியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் புதிதாக ரூ‌.10½ கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு பிரிவு கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு. க.ஸ்டாலின் திறந்து வைத்த நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொண்டார்.


Next Story