எட்டயபுரம் சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுனர் சங்கம் தீவைத்து எரிப்பு


எட்டயபுரம் சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுனர் சங்கம் தீவைத்து எரிப்பு
x
தினத்தந்தி 8 Sept 2023 12:15 AM IST (Updated: 8 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுனர் சங்கம் தீவைத்து எரிக்கப்பட்டது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம்- கோவில்பட்டி மெயின் ரோட்டில் சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுனர் சங்க அலுவலகம் உள்ளது. இங்கு வேன் டிரைவர்கள், கார் டிரைவர்கள் சங்க உறுப்பினர்கள் தினமும் வந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு சங்க தலைவர் கண்ணன் மோட்டார் சைக்கிளை சங்கத்திற்குள் நிறுத்தி சென்றுள்ளார். இந்த நிலையில், நள்ளிரவில் மர்ம நபர்கள் சங்கத்திற்கு தீவைத்துள்ளனர். இதில் சங்க அலுவலகத்திலிருந்து பொருட்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவை தீயில் எரிந்து சாம்பலாகின. இதுகுறித்த புகாரின் பேரில் எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது வழக்குப்பதிவு செய்து, சங்கத்திற்கு தீவைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகிறார்.


Next Story