எட்டயபுரம்பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


எட்டயபுரம்பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை போராட்டம்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் பேரூராட்சி 2-வது வார்டு பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சீராக வழங்கவில்லை என்று அப்பகுதி மக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் ஆத்திராஜ் தலைமையில் ஒன்றிய பொதுச்செயலாளர் ஹரிஹரசுதன் முன்னிலையில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனை அறிந்ததும் எட்டயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து விஜயன், முருகன், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜோதி ஆகியோர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story