ரூ.3¼ கோடியில் எட்டின்ஸ் சாலை விரிவாக்கம்


ரூ.3¼ கோடியில் எட்டின்ஸ் சாலை விரிவாக்கம்
x
தினத்தந்தி 18 May 2023 4:15 AM IST (Updated: 18 May 2023 4:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க ரூ.3¼ கோடியில் எட்டின்ஸ் சாலையை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க ரூ.3¼ கோடியில் எட்டின்ஸ் சாலையை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

போக்குவரத்து நெரிசல்

ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு 1,27,540 பேர் வசித்து வருகின்றனர். இதேபோல் வழக்கமான நாட்களில் 10,000 பேரும், வார விடுமுறை நாட்களில் 20,000 பேரும் ஊட்டிக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். 500-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. தற்போது கோடை சீசனையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வாகனங்கள் வந்து செல்கின்றனர்.

இதனால் நகரில் சேரிங்கிராஸ், ஏ.டி.சி., பஸ் நிலையம், மார்க்கெட் உள்பட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக சீசன் காலங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, நகருக்குள் வாகனங்கள் வர தடை விதிக்கப்படுகிறது. ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து ஏ.டி.சி. வழியாக சேரிங்கிராஸ் பகுதிக்கு எட்டின்ஸ் சாலை செல்கிறது. இந்த வழியாக அரசு பஸ்கள், தனியார் மினி பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் சென்று வருகின்றன.

சாலை விரிவாக்கம்

சீசன் காலங்களில் எட்டின்ஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. அந்த வழியாக சுற்றுலா பயணிகள் வாகனங்களில் ரோஜா பூங்காவுக்கு சென்று வருகின்றனர். இதனால் ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க சாலைகளை அகலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக எட்டின்ஸ் சாலையை அகலப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து நகராட்சி பொறியாளர் சேர்மகனி கூறியதாவது:-

ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், எட்டின்ஸ் சாலையை அகலப்படுத்த திட்டமிடப்பட்டு, டெண்டர் விடப்பட்டு உள்ளது. கோடை சீசன் முடிந்த பின்னர், ரூ.3.20 கோடி செலவில் விரிவாக்க பணிகள் தொடங்கப்படும். இருபுறமும் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு, பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் கைப்பிடியுடன் நடைபாதை அமைக்கப்படும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story