தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. வெற்றி பெறாது


தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. வெற்றி பெறாது
x

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. வெற்றி பெறாது என கரம்்பயத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.

நாகப்பட்டினம்

கரம்பயம்:

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. வெற்றி பெறாது என கரம்்பயத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.

பொதுக்கூட்டம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கரம்பயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் விளக்க நிதி அளிப்பு பொதுக்கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் பாண்டியன், பழனிவேலு, சுரேஷ் குமார், செல்வம், கலைச்செல்வி, வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ரூ.4 லட்சத்து 4 ஆயிரம் நிதியை பெற்றுகொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது

பிரதமர் மோடியும், மத்திய மந்திரி அமித்ஷாவும் தமிழ்நாட்டில் எப்படியாவது நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று கூறி வருகிறார்கள். அவர்கள் தலைகீழே நின்றாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியாது.

பா.ஜக. இமாச்சல் பிரதேசம், டெல்லி மாநகராட்சி, கர்நாடகா சட்டமன்ற தேர்தல்களில் தோல்வியை தழுவியுள்ளது. தற்போது பா.ஜ.க.வுக்கு எதிரான அலை வீசுகிறது. இந்த ஆண்டு 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வரப்போகிறது. இந்த தேர்தலிலும் பா.ஜ.க. வெற்றி பெற முடியாது.

விவசாய கடன்

விவசாயிகள் வாங்கிய கடன்களை தி.மு.க. தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் மத்திய அரசுக்கு சொந்தமான வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்யப்பட்டுள்ளதா?, 100 நாள் வேலை திட்டத்தை வைத்து தான் கிராமத்தில் உள்ள பல குடும்பங்கள் சாப்பிட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

ஆனால் மத்திய அரசு மறுத்து வருகிறது. மக்களுக்காக போராடும் கட்சிதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு என்பதை யாரும் மறந்துவிட மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story