கிடப்பில் போடப்பட்ட கூட நகரம் ரெயில்வே மேம்பால பணிகள்


கிடப்பில் போடப்பட்ட கூட நகரம் ரெயில்வே மேம்பால பணிகள்
x

குடியாத்தத்தை அடுத்த கூடநகரத்தில் மேம்பாலம் கட்டும் பணிக்காக ரெயில்வே கேட் மூடப்பட்டது. பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால் மாணவர்கள், பொதுமக்கள் ஆபத்தான நிலையில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.

வேலூர்

குடியாத்தத்தை அடுத்த கூடநகரத்தில் மேம்பாலம் கட்டும் பணிக்காக ரெயில்வே கேட் மூடப்பட்டது. பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால் மாணவர்கள், பொதுமக்கள் ஆபத்தான நிலையில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.

ரெயில்வே மேம்பாலம்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கூடநகரத்தில் ரெயில்வே கேட் உள்ளது. இதனை கடந்து அணங்காநல்லூர், மோட்டூர், சிங்கல்பாடி, மேல்ஆலத்தூர், கூடநகரம், கல்மடுகு, காக்காதோப்பு, தட்டாங்குட்டை, ராமாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் சென்று வந்தனர்.

ெரயில் செல்லும் போது ெரயில்வே கேட் பூட்டப்படுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாணவ- மாணவிகள் நீண்ட நேரம் காத்திருந்து ரெயில் சென்றபிறகு, கேட்டை கடந்து சென்று வருகின்றனர். எனவே கூடநகரம் ெரயில்வே கேட் பகுதியில் ெரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

கேட் மூடப்பட்டது

இதனையடுத்து ரெயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்து. அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. கடந்த 2015-ம் ஆண்டு ெரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த கூடநகரம் ெரயில்வே கேட் மூடப்பட்டது. அதன் பின்னர் ெரயில்வே துறை சார்பில் கூடநகரம் ெரயில்வே கேட் அமைந்திருந்த பகுதியில் மட்டும் மேம்பாலம் கட்டப்பட்டது. தொடர்ச்சியாக மேம்பால பணிகள் நடைபெறவில்லை.

இதனால் பல ஆண்டுகளாக இந்த கூடநகரம் ெரயில்வே மேம்பாலத்தை கட்டித்தர சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைகள் விடுத்து வந்தனர்.

ஆபத்தான முறையில்...

தேர்தலின் போது வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளர்களிடம் கூடநகரம் ெரயில்வே மேம்பாலத்தை கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக வேட்பாளர்கள் தெரிவித்தனர். ஆனால் இதுநாள் வரை மேம்பாலம் கட்டப்படவில்லை.

ெரயில்வே மேம்பாலம் கட்டப்படாததாலும், ெரயில்வே கேட் மூடப்பட்டதாலும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் குடியாத்தம் பகுதிக்கும், சுற்றுப்புற பகுதிக்கும் செல்ல ஆபத்தான முறையில் ெரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். சில நேரங்களில் மாணவர்கள் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயில்கள் வந்துவிடுவதால் சைக்கிளை தண்டவாளத்தில் போட்டு விட்டு ஓடிய சம்பவங்களும் நடந்துள்ளது. தண்டவாளத்தை கடக்கும்போது சிலர் ரெயிலில் அடிபட்டு இறந்ததாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.

தண்ணீர் தேங்குகிறது

இதுகுறித்து கூடநகரம் ஊராட்சி மன்ற தலைவர் பி.கே.குமரன் கூறியதாவது:-

எனது ஊராட்சிக்குட்பட்ட பார்வதியாபுரம் அருகே கூட நகரம் ெரயில்வே கேட் உள்ளது. இந்த கேட்டை தாண்டி பார்வதியாபுரம், பூசாரிப்பட்டி, ஸ்ரீராமநாதபுரம், முஸ்லிம்பூர், பூக்காரான்பட்டி, முனிசாமி பட்டி, அருந்ததி காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. அதேபோல் மறுபக்கத்தில் கூடநகரம், சிங்கல்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளது. ெரயில்வே கேட் மூடப்பட்டதால் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். மறுபக்கத்தில் உள்ள கூட நகரம் கிராமத்திற்கு அத்யாவசிய பணிகளுக்காக செல்ல வேண்டும் எனில் ஆபத்தான முறையில் ெரயில்வே தண்டவாளத்தை கடந்துதான் செல்ல வேண்டும்.

இல்லை என்றால் சுமார் மூன்று கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு மேல்ஆலத்தூர் வழியாக கூட நகரத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், கூட நகரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, கிராம நிர்வாக அலுவலகம், வங்கி மற்றும் மின்வாரிய அலுவலகம் உள்ளிட்டவைகளுக்கு செல்ல வேண்டும். விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். முக்கியமாக மாணவர்களும், நோயாளிகளும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல் மேல்ஆலத்தூர் வழியாக சுற்றி வரும்போது ெரயில்வே தரைபாலத்தில் மழைக்காலங்களில் பல அடி தண்ணீர் தேங்கும். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துடன் ெரயில்வே தரைப்பாலத்தை கடந்து அலுவலகத்திற்கு அல்லது பள்ளி, மருத்துவமனைக்கு செல்கின்றனர். கூடநகரம் பகுதியை சேர்ந்த யாராவது இறந்துவிட்டால் ெரயில்வே தண்டவாளத்தின் மறுபக்கத்தில் உள்ள சுடுகாட்டில்தான் அடக்கம் செய்ய வேண்டும். இதனால் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து சுடுகாட்டுக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது என்றார்.

பெற்றோர் கவலை

தட்டாங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் கூறியதாவது:-

ரயில்வே கேட் மூடப்பட்டதால் பல கிராம மக்களுக்கு மிகவும் கஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. பல கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. மேல்முட்டுகூர் ஊராட்சியைச் சேர்ந்த கல்மடுகு, தட்டாங்குட்டை, ராமாபுரம் கிராம மக்கள் மருத்துவமனைக்கும், பள்ளிக்கும் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். ரெயில்வே கேட் மூடப்பட்டதால் மேல்ஆலத்தூர் ெரயில்வே தரைப்பாலத்தை கடந்து செல்கின்றனர். அங்கு எப்போதும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மிகவும் சிரமத்துடனே கடந்து செல்கின்றனர்.

கூட நகரம், அணங்காநல்லூர், சிங்கல்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், குடியாத்தம் பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு செல்லவும், நோயாளிகள் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு செல்லவும் இந்த ெரயில்வே கேட்டை கடந்து தான் வரவேண்டும். தினமும் காலையிலும், மாலையிலும் மாணவர்கள் மிகவும் சிரமத்துடன் கடந்து செல்வதால் மாணவர்கள் பள்ளி முடிந்து தங்கள் வீட்டுக்கு வரும்வரை பெற்றோர்கள் கவலையுடன் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

தண்டவாளத்தை கடக்காமல் மாற்றுப்பாதையில் சென்றால் 20 நிமிடம் முதல் அரைமணி நேரம் வரை தாமதமாக செல்ல வேண்டி உள்ளதால், ஆபத்தையும் பொருட்படுத்தாமல் ெரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர் என்றார்.

விரைவில் பணிகள் தொடங்கும்

ெரயில்வே மேம்பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது ெரயில்வே திட்டப் பணிகள் திட்டத்தின் கீழ் கூடநகரம் ெரயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பல ஆண்டுகளுக்கு முன்பே திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தது.

தற்போது 28 விவசாயிகளிடம் இருந்து ெரயில்வே மேம்பாலத்திற்காக நிலம் எடுக்கப்பட்டு அதற்கு இழப்பீடு தொகையாக ரூ.4 கோடியே 39 லட்சம் வழங்கப்பட்டு விட்டது. இந்த ெரயில்வே மேம்பாலம் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு அமையவுள்ளது. ரூ.37 கோடியே 40 லட்சத்தில் ெரயில்வே மேம்பாலம் கட்டப்பட உள்ளது. விரைவில் இதற்கான டெண்டர் விடும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. டெண்டர் விடப்பட்டதும் 18 மாதங்களில் ெரயில்வே மேம்பாலம் கட்டப்படும் என தெரிவித்தனர்.


Next Story