ரத்ததானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும்
தமிழக முதல்-அமைச்சரின் அறிவுரைப்படி ரத்ததானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் அமைச்சர் பொன்முடி வேண்டுகோள்
விழுப்புரம்
விழுப்புரத்தில் த.மு.மு.க. சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறும்போது, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து தரப்பினரும் ரத்ததானம் செய்ய வேண்டுமென அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதன் பேரில் விழுப்புரத்தில் த.மு.மு.க. உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பணி எப்போதும் தொடர வேண்டும். அனைவரும் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும். முதல்-அமைச்சரின் கோரிக்கையை நிறைவேற்றியமைக்கு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., மனித நேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல்சமது எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், நகர செயலாளர் சக்கரை, ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, முருகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.