ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

திருச்செங்கோடு அருகே சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

நாமக்கல்

எலச்சிபாளையம்:

மல்லசமுத்திரம் ஒன்றியம் சப்பையபுரம் ஊராட்சியில் சாலை இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இதனால் வாகனங்கள் செல்லமுடியாமல் நெருக்கடி ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று வருவாய்த்துறையினர் நில அளவை பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதையொட்டி 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story