மக்களுக்கு நிரந்தர நன்மைகள் செய்வதில் வெற்றி பெற்ற தலைவர் வைகோ; ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் புகழாரம்


மக்களுக்கு நிரந்தர நன்மைகள் செய்வதில் வெற்றி பெற்ற தலைவர் வைகோ; ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் புகழாரம்
x

மக்களுக்கு நிரந்தர நன்மைகள் செய்வதில் வெற்றி பெற்ற தலைவர் வைகோ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் புகழ்ந்து பேசினார்.

ஈரோடு


மக்களுக்கு நிரந்தர நன்மைகள் செய்வதில் வெற்றி பெற்ற தலைவர் வைகோ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் புகழ்ந்து பேசினார்.

ஆவணப்படம்

ஈரோடு திரையரங்கில் மாமனிதன் வைகோ ஆவணப்படம் வெளியீட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு படத்தை முழுமையாக பார்த்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

வைகோ வெறும் அரசியல்வாதி அல்ல. மனித பண்புகள் நிறைந்த மாமனிதர். அப்பாவிகள் தூக்குத்தண்டனை பெறும் நிலையில் இருந்தபோது, தானே முன்வந்து அதை தடுத்து நிறுத்தி இருக்கிறார். அரசியலில் இருக்கும் ஒரு மனிதர், தனிப்பட்ட மக்களுக்காக சிந்தித்து அவர்களுக்காக பணியாற்றும் மாமனிதனாக இருக்கிறார்.

திருப்புமுனை

வைகோ சாதாரண அரசியல்வாதி அல்ல. பதவிக்காக, அமைச்சர் ஆகி விடுவதற்காக அவர் அரசியலில் இருக்கவில்லை. தமிழர்களுக்காக, தமிழுக்காக, திருப்புமுனையை ஏற்படுத்தும் அரசியல் தலைவர். அதற்காக கடுமையாக உழைக்கிறார்.

அவரது கொள்கைக்காக, அவர் உண்மை என்று நம்புகிற விஷயத்துக்காக தீவிரமாக உழைக்கிறார். தமிழர்களுக்காக அவர் தொடர்ந்து எடுத்துவரும் பெரும் முயற்சிகளை பாராட்ட வேண்டும்.

வெற்றி பெற்ற தலைவர்

வைகோ வெற்றி பெற்ற அரசியல்வாதி. எது வெற்றி என்றால் பதவிகளில் இருப்பது அல்ல. நிரந்தரமாக இந்த மக்களுக்கு நன்மைகளை செய்து அதை விட்டுச்செல்பவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள். பெரியார், காமராஜர், கருணாநிதி ஆகியோர் வரிசையில் வரக்கூடிய தலைவராக வைகோ உள்ளார்.

இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் சு.முத்துசாமி, ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story