சாலை தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி முன்னாள் ராணுவ வீரர் பலி


சாலை தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி முன்னாள் ராணுவ வீரர் பலி
x

ஜோலார்பேட்டை அருகே சாலை தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி முன்னாள் ராணுவ வீரர் பலியானார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு அடுத்த பல்லபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் திருமலை (வயது 41), முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு பாரதி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். திருமலை 2 நாட்களுக்கு முன்பு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு ரெயிலில் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.

பின்னர் நேற்று இரவு ஜோலார்பேட்டை திரும்பினார். அங்கிருந்து மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு திருப்பத்தூர் நோக்கி சென்றார். சாலை நகர் பகுதியில் சென்றபோது திடீரென நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் (சென்டர் மீடியன்) மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story