கொண்டலாம்பட்டி அருகே மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி முன்னாள் ராணுவ வீரர் சாவு


கொண்டலாம்பட்டி அருகே  மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி முன்னாள் ராணுவ வீரர் சாவு
x

கொண்டலாம்பட்டி அருகே மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்தார்.

சேலம்

கொண்டலாம்பட்டி,

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 38). ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர். இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விளையாட்டு பயிற்சி ஆசிரியருக்கு படித்து வந்தார். நேற்று முன்தினம் இவர் அரியனூரில் இருந்து சேலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

நெய்க்காரப்பட்டி இளந்தோப்பு பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது பிரகாஷ் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story