கோர்ட்டில் நீதித்துறை சார்நிலை காலிப்பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவவீரர்கள் விண்ணப்பிக்கலாம்
கோர்ட்டில் நீதித்துறை சார்நிலை காலிப்பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
நீதித்துறை ஆட்சேர்ப்புபிரிவு, சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் உள்ள மாவட்ட சார்நிலை நீதித்துறை பணிகளுக்கு ஆட்தேர்வு நடைபெற உள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்ட சார்நிலை நீதித்துறை பணிக்கு நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், இளநிலை கட்டளை நிறைவேற்றுனர், ஒளிப்படநகல் எடுப்பவர் ஆகிய காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எனவே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்களது விண்ணப்பத்தை https://www.mhc.tn.gov.inஎன்ற இணையதளத்தில் வருகிற 22-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.. மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநரை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.