சிறப்பு காவலர் பணிக்கு முன்னாள் படை வீரர்கள் பதிவு செய்யலாம்
சிறப்பு காவலர் பணிக்கு முன்னாள் படை வீரர்கள் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
சிறப்பு காவலர் பணிக்கு முன்னாள் படை வீரர்கள் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டு்ள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
கோவில் பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலராக பணிபுரிய முன்னாள் படை வீரர்கள் பதிவு செய்யலாம். நல்ல உடல் ஆரோக்கியமும் விருப்பமும் உள்ள 62 வயதிற்கு உட்பட்ட முன்னாள் படை வீரர்கள் தங்களது பெயரினை திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 04175- 233047 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story