முன்னாள் ராணுவ வீரர்கள் சந்திப்பு


முன்னாள் ராணுவ வீரர்கள் சந்திப்பு
x

வடுகந்தாங்கலில் முன்னாள் ராணுவ வீரர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

வேலூர்

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த வடுகந்தாங்கலில் 1967-ம் ஆண்டு ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கேப்டன் வி.எஸ்.குப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் படை வீரர் நல வாரிய இணை இயக்குனர் மேஜர் போனிவின்சென்ட் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாட்டில் திருச்சி, தூத்துக்குடி, மதுரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கொரோனா காலத்தில் இறந்து போன முன்னாள் ராணுவ வீரர்களின் மனைவிகளை விழாக்குழுவினர் கவுரவித்தனர். முன்னதாக சங்கமம் விழா கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story