முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்


முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x

திருவாரூரில் முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது

திருவாரூர்

திருவாரூர்;

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றுதல், நிலம் அளவீடு செய்தல், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் 23 மனுக்கள் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து ஈமச்சடங்கு மானியமாக தலா ரூ.10 ஆயிரம் வீதம் இருவருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story