முன்னாள் படைவீரர்களுக்கு ரூ.7½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


முன்னாள் படைவீரர்களுக்கு ரூ.7½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x

முன்னாள் படைவீரர்களுக்கு ரூ.7½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைத் தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் 30 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்,.

இதில் 20 பேருக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் கருணைத்தொகை, வீட்டு வரி, மானியம், நிதி உதவி, மருத்து் நிதிஉதவி, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் உதவி இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் ஞானசேகர், முன்னாள் படை வீரர் நல அமைப்பாளர் கேப்டன் சாமுவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story