முன்னாள் ராணுவ வீரர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு முன்னாள் ராணுவ வீரர்கள் நல உதவி மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க தலைவர் கேசவராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். முன்னாள் ராணுவ வீரர் ஜெயபிரகாஷ் நாராயணசாமி மற்றும் பலர் பேசினர். கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியில் ராணுவ வீரர் பிரபு படுகொலையை கண்டித்தும், அரசியல் கட்சி பிரமுகர் சரவணன் ராணுவத்தை இழிவுபடுத்தி பேசியதை கண்டித்தும், அவரை கைது செய்ய கோரியும், கயத்தாறு தாலுகா திருமலாபுரம் முன்னாள் ராணுவ வீரர் சுப்புராஜ் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் முன்னாள் ராணுவவீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story