காய்கறி கடையை சூறையாடிய முன்னாள் ராணுவ வீரர் கைது


காய்கறி கடையை சூறையாடிய முன்னாள் ராணுவ வீரர் கைது
x
தினத்தந்தி 26 Aug 2023 12:15 AM IST (Updated: 26 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காய்கறி கடையை சூறையாடிய முன்னாள் ராணுவ வீரர் கைது

கன்னியாகுமரி

களியக்காவிளை:

களியக்காவிளை அருகே உள்ள கடுவாக்குழியை சேர்ந்தவர் சுரேந்திரன் (வயது 47). அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் இருந்து அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜெல்வின் (41) காய்கறிகள் வாங்கினார். ஆனால் அதற்கான பணத்தை கொடுக்கவில்லை எனத்தெரிகிறது. இதையடுத்து சுரேந்திரன், அவரிடம் பணத்தை கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெல்வின் கடையை அடித்து உடைத்து காய்கறிகளை சூறையாடினார். இதுகுறித்து சுரேந்திரன் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெல்வினை கைது செய்தனர்.


Next Story