முன்னாள் ராணுவவீரர் தூக்குப் போட்டு தற்கொலை


முன்னாள் ராணுவவீரர் தூக்குப் போட்டு தற்கொலை
x

கணியம்பாடி அருகே முன்னாள் ராணுவவீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

வேலூர் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த பெரிய பாலம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 70), முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சின்னபொண்ணு (60). இவர்களுக்கு 3 மகள் மற்றும் 1 மகன் உண்டு. மூன்று மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. தேவேந்திரனின் மகன் திருமால் (32), வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வந்தார். அவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

மகன் இறந்த துக்கத்தில் இருந்து மீளாமல் மன வேதனையில் தேவேந்திரன் இருந்துள்ளார். இதனால் அவர் 2 முறை தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அவரை உறவினர்கள் காப்பாற்றி உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது, தேவேந்திரன் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தேவேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story