முன்னாள் மணவர்கள் சந்திப்பு


முன்னாள் மணவர்கள் சந்திப்பு
x

இடையன்குடியில் முன்னாள் மணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே இடையன்குடி கால்டுவெல் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1972-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவ-மாணவிகள் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் மாணவர் அதிசய ஜான் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவரும், கோவா தொழில் அதிபருமான பால்ராஜ், பள்ளி தாளாளர் ஜேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவியும், ஓய்வுபெற்ற ஆசிரியையுமான கலாவதி மணிமாறன் வரவேற்று பேசினார்.

முன்னாள் மாணவர்கள் ஜெயக்குமாரி, வில்லியம், பகவதி பாண்டியன், லிவிங்ஸ்டன் ஆகியோர் தங்களது பள்ளிக்கூட நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு பயிற்றுவித்த ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சுவிசேஷ முத்து, டாரதி சுவிஷேச முத்து உள்ளிட்டவர்களை கவுரவித்து நினைவு பரிசு வழங்கினர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் செய்து இருந்தனர்.


Next Story