2 ஆயிரத்து 619 பேர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை எழுதினார்கள்.


2 ஆயிரத்து 619 பேர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை எழுதினார்கள்.
x

திருப்பூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 619 பேர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை எழுதினார்கள். 640 பேர் தேர்வு எழுத வரவில்லை.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 619 பேர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை எழுதினார்கள். 640 பேர் தேர்வு எழுத வரவில்லை.

2,619 பேர் தேர்வு எழுதினர்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான எழுத்துத்தேர்வு தமிழகம் முழுவதும் நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத 3 ஆயிரத்து 259 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு ஹால்டிக்கெட் அனுப்பி வைக்கப்பட்டது.

திருப்பூரில் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி, அங்கேரிப்பாளையம் ரோடு கொங்கு வேளாளர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. கொங்கு வேளாளர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 1 பெண் உள்பட 2 ஆயிரத்து 28 பேர் தேர்வு எழுதினார்கள். பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியில் 461 பெண்கள், 130 ஆண்கள் என 591 பேர் என மொத்தம் 2 ஆயிரத்து 619 பேர் தேர்வு எழுதினார்கள். காலையில் பொதுத்தேர்வும், மதியம் தமிழ் எழுத்துத்தேர்வும் நடைபெற்றன. நேற்று நடந்த தேர்வில் மொத்தம் 640 பேர் தேர்வு எழுதவரவில்லை.

போலீஸ் கமிஷனர் ஆய்வு

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் காலை 8 மணிக்கே தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினார்கள். தேர்வு அறைக்கு செல்போன், கால்குலேட்டர் போன்ற பொருட்கள் எதுவும் கொண்டு செல்ல அனுமதியில்லை. பேனா, ஹால்டிக்கெட் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் தேர்வு எழுத வந்தவர்கள், மைய நுழைவு வாசலில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வையொட்டி திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தலைமையில் கண்காணிக்கப்பட்டது. தேர்வு மையத்துக்கு மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி. பாபு வந்து ஆய்வு செய்தார். தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் தேர்வு மையங்களில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டன.

---------------

திருப்பூர் பிஷப் உபகாரசாமி பள்ளியில் நடந்த போலீஸ் தேர்வை மாநகர போலீஸ் கமிஷனர் பாபு பார்வையிட்ட போது எடுத்த படம்.


Related Tags :
Next Story