மாவட்டத்தில் 82 மையங்களில் பிளஸ்-2 தேர்வை 19,620 மாணவ-மாணவிகள் எழுதினர்-2,680 பேர் எழுதவில்லை


மாவட்டத்தில் 82 மையங்களில் பிளஸ்-2 தேர்வை 19,620 மாணவ-மாணவிகள் எழுதினர்-2,680 பேர் எழுதவில்லை
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் 82 மையங்களில் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வை 19,620 மாணவ-மாணவிகள் எழுதினர். 2,680 பேர் தேர்வு எழுத வரவில்லை.

பிளஸ்-2 பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 107 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 86 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என 193 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 507 மாணவர்களும், 11 ஆயிரத்து 250 மாணவிகளும் மற்றும் தனித் தேர்வர்கள் என 22 ஆயிரத்து 757 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 2 தனித்தேர்வு மையங்கள் உள்பட 82 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

இந்தநிலையில் நேற்று பிளஸ்-2 தமிழ் தேர்வை எழுதுவதற்கு 22 ஆயிரத்து 301 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 19 ஆயிரத்து 620 மாணவ, மாணவிகள் மட்டுமே தமிழ் தேர்வை எழுதினர். 2 ஆயிரத்து 680 பேர் தேர்வு எழுத வரவில்லை. ஒருவர் மாற்றுத்திறனாளி என்பதால் அவர் மொழிப்பாடம் எழுத விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

கலெக்டர் திடீர் ஆய்வு

பொதுத்தேர்வு பணிகளில் 3 ஆயிரத்து 500 அரசு பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஈடுபட்டனர். 82 பேர் கொண்ட பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகள் முறைகேடுகளில் ஈடுபடாமல் தடுக்க ஆய்வு மேற்கொண்டனர்.

இந்தநிலையில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறதா?, மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என்று அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.


Next Story