மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 96.18 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி; மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்து சாதனை
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதிய 96.18 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் மாநில அளவில் ஈரோடு 2-வது இடத்தை பிடித்து சாதனை படைத்து உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதிய 96.18 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் மாநில அளவில் ஈரோடு 2-வது இடத்தை பிடித்து சாதனை படைத்து உள்ளது.
மாநிலத்தில் 2-வது இடம்
தமிழ்நாட்டில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 222 பள்ளிக்கூடங்களில் படித்த 21 ஆயிரத்து 626 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி இருந்தனர்.
இதில் 20 ஆயிரத்து 799 பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர். இது 96.18 சதவீத தேர்ச்சி ஆகும். இந்த தேர்ச்சியின் மூலம் ஈரோடு மாவட்டம் பிளஸ்-1 தேர்ச்சி பட்டியலில் மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்து சாதனை படைத்து இருக்கிறது.
மொத்தம் தேர்வு எழுதிய 21 ஆயிரத்து 626 பேரில் 10 ஆயிரத்து 85 பேர் மாணவர்கள், 11 ஆயிரத்து 541 பேர் மாணவிகள். இதில் 9 ஆயிரத்து 558 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். இது 94.77 சதவீதமாகும். மாணவிகள் 11 ஆயிரத்து 241 பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். இது 97.40 சதவீதமாகும்.
அரசு பள்ளிகள்
104 அரசு பள்ளிக்கூடங்களில் படித்த 4 ஆயிரத்து 128 மாணவர்களும், 5 ஆயிரத்து 811 மாணவிகளும் என 9 ஆயிரத்து 939 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 3 ஆயிரத்து 777 மாணவர்கள், 5 ஆயிரத்து 5622 மாணவிகள் என 9 ஆயிரத்து 339 பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.
இது 93.96 சதவீதம் தேர்ச்சியாகும்.
கடந்த ஆண்டு இது 87.38 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
12 அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் 770 மாணவர்கள், 1,009 மாணவிகள் என 1,779 பேர் தேர்வு எழுதியதில் 1,738 பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.
இது 97.70 சதவீதமாகும். 6 மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் 291 மாணவர்கள், 384 மாணவிகள் என 675 பேர் தேர்வு எழுதியதில் 602 பேர் தேர்ச்சி அடைந்தனர். இது 89.19 சதவீதமாகும்.
சுயநிதி
17 சுயநிதி பள்ளிக்கூடங்களில் 1,090 மாணவர்கள், 810 மாணவிகள் என 1,900 பேர் தேர்வு எழுதியதில் 1,878 பேர் தேர்ச்சி அடைந்தனர். இது 98.84 சதவீதமாகும். 81 மெட்ரிக் பள்ளிக்கூடங்களில் 3 ஆயிரத்து 769 மாணவர்கள், 3 ஆயிரத்து 477 மாணவிகள் என 7 ஆயிரத்து 246 பேர் தேர்வு எழுதியதில் 7 ஆயிரத்து 160 பேர் தேர்ச்சி அடைந்தனர். அது 98.81 சதவீதமாகும்.
2 நலத்துறை பள்ளிகளில் 37 மாணவர்கள், 50 மாணவிகள் என 87 பேர் தேர்வு எழுதியதில் 82 பேர் தேர்ச்சி அடைந்தனர். இது 94.25 சதவீதமாகும். கடந்த ஆண்டு ஈரோடு மாவட்ட பிளஸ்-1 பொதுத்தேர்வில் 92.13 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 96.18 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்து மாநில அளவில் 2-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தனர்.
100 சதவீதம் தேர்ச்சி
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 104 அரசு பள்ளிக்கூடங்களில் 39 அரசுப்பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து சாதனை படைத்து உள்ளனர்.
2 அரசு நிதி உதவி பள்ளிக்கூடங்களும், 43 மெட்ரிக் பள்ளிக்கூடங்கள், 7 சுயநிதி பள்ளிக்கூடங்கள் என மாவட்டத்தில் மொத்தம் 79 பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் 100 சதவீதம் பெற்று உள்ளனர். மாநகராட்சி, நலத்துறை பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடையவில்லை.