டி.என்.பி.எஸ்.சி. ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான தேர்வு


டி.என்.பி.எஸ்.சி. ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான தேர்வு
x
தினத்தந்தி 29 May 2023 12:15 AM IST (Updated: 29 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி.யின் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான தேர்வு ராமநாதபுரத்தில் நடைபெற்றது.

ராமநாதபுரம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி.யின் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான தேர்வு ராமநாதபுரத்தில் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தேர்வு நடைபெற்ற மையத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- டி.என்.பி.எஸ்.சி. ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான தேர்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை 1059 பேர் எழுதுகின்றனர். தேர்வு மையத்தில் தேவையான வசதிகள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.


Related Tags :
Next Story