மாணவ-மாணவிகளுக்கு போட்டி தேர்வுக்கான பயிற்சி


மாணவ-மாணவிகளுக்கு போட்டி தேர்வுக்கான பயிற்சி
x

புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு போட்டி தேர்வுக்கான பயிற்சி நடந்தது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்;

கொள்ளிடம் அருகே புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கவிழா நடைபெற்றது.விழாவிற்கு கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிமைய ஒருங்கிணைப்பாளர் குமார் வரவேற்றார். பயிற்சியாளர்கள் குணசெல்வன், பிரபு மற்றும் பயிற்றுனர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில் வணிகவியல் துறை தலைவர் நாராயணசாமி, கணினி அறிவியல் துறை தலைவர் பிரியா, ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் சத்தியமூர்த்தி, உதவிபேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் வணிக நிர்வாகவியல் துறை உதவிபேராசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.


Next Story