பொறியியல் பணிகளுக்கான தேர்வு


பொறியியல் பணிகளுக்கான தேர்வு
x

நெல்லையில் பொறியியல் பணிகளுக்கான தேர்வு நடந்தது.

திருநெல்வேலி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் 17 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. காலை, மாலை என 2 நேரங்களில் நடத்தப்பட்ட தேர்வில் 4,831 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் காலையில் 2,752 பேர், பிற்பகலில் 2,746 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். மற்றவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வு பணிகளை கலெக்டர் விஷ்ணு உத்தரவுப்படி அதிகாரிகள் கண்காணித்தனர்.


Next Story