தஞ்சை மாவட்டத்தில் 95.18 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி


தஞ்சை மாவட்டத்தில் 95.18 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி
x

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் 95.18 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் தஞ்சை மாவட்டம் மாநில அளவில் 16 -வது இடத்தை பிடித்துள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் 95.18 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் தஞ்சை மாவட்டம் மாநில அளவில் 16 -வது இடத்தை பிடித்துள்ளது.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் இந்த தேர்வினை 27 ஆயிரத்து 37 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் மாணவர்கள் 12 ஆயிரத்து 712 பேரும், மாணவிகள் 14 ஆயிரத்து 325 பேரும் அடங்குவர். இதில் 25 ஆயிரத்து 734 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 11 ஆயிரத்து 830 பேரும், மாணவிகள் 13 ஆயிரத்து 904 பேரும் அடங்குவர். தேர்ச்சி சதவீதம் 95.18 ஆகும். இதில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 93.06. மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 97.06.தஞ்சை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 86.02 சதவீதமும், மாநகராட்சி பள்ளிகள் 92.86 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.44 சதவீதமும், அரசு பள்ளிகள் 92.05 சதவீதமும், பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகள் 98.43 சதவீதமும், சுயநிதி பள்ளிகள் 99.07 சதவீதமும், சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் 100 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.

மாநில அளவில் 16-வது இடம்

கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் 94.69 சதவீதம் தேர்ச்சி மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று இருந்தனர். இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட 0.49 சதவீதம் மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் தஞ்சை மாவட்டம் மாநில அளவில் 16-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டும் தஞ்சை மாவட்டம் 16-வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

100 சதவீத தேர்ச்சி:

பிளஸ்-2 தேர்வில் 16 அரசு பள்ளிகளும், 33 மெட்ரிக் பள்ளிகளும், சுயநிதி பிரிவு (ஸ்டேட் போர்டு) 6 பள்ளிகளும், பகுதியாக அரசு உதவி பெறும் பள்ளிகள் 5, முழுவதுமாக அரசு உதவி பெறும் பள்ளி 1, சமூக நலத்துறை சார்பில் செயல்படும் பள்ளி 1 என மொத்தம் 62 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.கடந்த ஆண்டு 13 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்த நிலையில், இந்த ஆண்டு 16 பள்ளிகளாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு 39 மெட்ரிக் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 33 பள்ளிகளாக குறைந்துள்ளது.

தேர்ச்சி விழுக்காடு அதிகரிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் அதன் தேர்ச்சி விழுக்காடு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு 90.25 சதவீதமாகவும், 2019ம் ஆண்டு 91.05 சதவீதமாகவும், 2020 -ம் ஆண்டு 92.89 சதவீதமாகவும், 2022-ம் ஆண்டு 94.69 சதவீதமாகவும், 2023-ம் ஆண்டு (தற்போது) 95.18 சதவீதமாக உயர்ந்துள்ளது.


Next Story