உதவி சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்கான தேர்வு
அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் உதவிசப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்கான தேர்வு இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வளாகத்தில் தொழிற் பாதுகாப்பு படையின் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்கான தேர்வு இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது.
இதில் நாட்டின் பல மாநிலங்களில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள், அணுசக்தி நிலையங்கள் மற்றும் விண்வெளி மையங்கள் போன்ற இடங்களில் பணியில் இருக்கும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை ஏட்டுகள் 1074 பேர் கலந்து கொண்டு உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்கான தேர்வு எழுதுகின்றனர்.
இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டருக்கான பயிற்சி அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story