அரசு பள்ளியில் முதன்மை செயலாளர் ஆய்வு


அரசு பள்ளியில் முதன்மை செயலாளர் ஆய்வு
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முண்டியம்பாக்கம் அரசு பள்ளியில் முதன்மை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம்

தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக்சிரு நேற்று விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்றார். பின்னர் அங்கு பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்று அவர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அங்கு மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த முட்டையுடன் கூடிய மதிய உணவின் தரத்தை பரிசோதனை செய்தார்.

பின்னர் மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கினார். அப்போது அவர் அங்கிருந்த சத்துணவு ஊழியர்களிடம், மாணவர்களுக்கு சுகாதாரமாக உணவு வழங்க வேண்டும். இதில் தவறு ஏதும் நடைபெறாமல் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று, அங்கு குண்டலபுலியூர் காப்பகத்திலிருந்து மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் பழனி, சமூகநலத்துறை இயக்குனர் அமுதவள்ளி, ஒன்றியக்குழு தலைவர் சங்கீத அரசி ரவிதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, முபாரக் அலி, சத்துணவு மேலாளர் ஹேமலதா, பள்ளி தலைமை ஆசிரியை ஆனந்தி மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் உடன் இருந்தனர்.


Next Story