விழுப்புரம்- புதுச்சேரி மார்க்கத்தில் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு


விழுப்புரம்- புதுச்சேரி மார்க்கத்தில்    ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு
x

விழுப்புரம்- புதுச்சேரி மார்க்கத்தில் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு

விழுப்புரம்


தென்னக ரெயில்வே பொது மேலாளர் அடுத்த மாதம் (அக்டோபர்) திருச்சி கோட்டத்திற்குட்பட்ட ரெயில் நிலையங்களில் ஆய்வுப்பணி மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் திருமால், கார்த்திகேயன், அம்ருத்சுனாகர் ஆகியோர் தனி டிராலி மூலம் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து புதுச்சேரி வரை சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது விழுப்புரம்- புதுச்சேரி இடையே உள்ள ரெயில் தண்டவாளங்களின் உறுதித்தன்மை, ரெயில்வே கேட், சிக்னல் பராமரிப்பு குறித்தும், ரெயில்வே பாலங்கள் ஏதேனும் பழுதடைந்துள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது தென்பட்ட சிறு, சிறு குறைகளை உடனடியாக சரிசெய்யும்படி ரெயில்வே ஊழியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் ரெயில்வே நிலையங்களை சுகாதாரமான முறையில் பராமரிக்கும்படியும், பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளனவா? என்பதை உறுதி செய்யும்படியும் அறிவுறுத்தினர்.


Next Story