குளித்தலை நீதிமன்றத்தில் ஆய்வு


குளித்தலை நீதிமன்றத்தில் ஆய்வு
x

குளித்தலை நீதிமன்றத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

கரூர்

குளித்தலையில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜலிங்கம் நேற்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குளித்தலை குற்றவியல் நீதிமன்றத்தில் உள்ள கோப்புகள், வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள நகைகள், பணம் உள்ளிட்டவைகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். முன்னதாக குளித்தலை வக்கீல் சங்கம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கு குளித்தலை வக்கீல் சங்க தலைவர் தலைமை தாங்கினார். குளித்தலை குற்றவியல் நீதிமன்ற நடுவர் பொறுப்பு பிரகதீஸ்வரன், வக்கீல் சங்க நிர்வாகிகள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வக்கீல் சங்க செயலாளர் நாகராஜன் வரவேற்றார். முடிவில் இணை செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.


Next Story