தொடக்க கல்வி பட்டய படிப்பிற்கான தேர்வு அட்டவணை வெளியீடு..!


தொடக்க கல்வி பட்டய படிப்பிற்கான தேர்வு அட்டவணை வெளியீடு..!
x

தொடக்க கல்வி பட்டய படிப்பிற்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு அட்டவணைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 23ம் தேதியும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 22ம் தேதியும் தேர்வுகள் தொடங்க உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறஉள்ளது.

முதலாமாண்டு தேர்வு அட்டவணை:-

ஜூன் 23- வியாழன் - கற்கும் குழந்தை

ஜூன் 27 - திங்கள் - கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும்-1

ஜூன் 30 - வெள்ளி - மொழிக் கல்வி (தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்) - 1, இளஞ்சிறார் கல்வி - 1

ஜூலை 4 - செவ்வாய் - ஆங்கில மொழிக் கல்வி - 1

ஜூலை 6 - வியாழன்- கணிதம் கற்பித்தல் -1

ஜூலை 10 - திங்கள் - அறிவியல் கற்பித்தல் -1

ஜூலை 12 - புதன் - சமூக அறிவியல் கற்பித்தல்-1

2-ம் ஆண்டு தேர்வு அட்டவணை:-

ஜூன் 22 - வியாழன் - இந்திய கல்வி முறை

ஜூன் 26 - திங்கள் - கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும் - 2

ஜூன் 28 - புதன் - மொழிக் கல்வி (தமிழ், தெலுங்கு, உறுது, மலையாளம்) -2, இளஞ்சிறார் கல்வி - 2

ஜூலை 3 - திங்கள் - ஆங்கிலம் கற்பித்தல் -2

ஜூலை 5 - புதன் - கணிதம் கற்பித்தல் கல்வி - 2

ஜூலை 7 - வெள்ளி - அறிவியல் கற்பித்தல் - 2

ஜூலை 11 - செவ்வாய் - சமூக அறிவியல் கற்பித்தல் - 2

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story