தேர்வு போட்டிகள் 24-ந் தேதி நடக்கிறது
மாவட்ட விளையாட்டு விடுதி, மையங்களில் சேர தேர்வு போட்டிகள் வருகிற 24-ந் தேதி நடக்கிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாவட்ட விளையாட்டு விடுதி, மையங்களில் சேர தேர்வு போட்டிகள் வருகிற 24-ந் தேதி நடக்கிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு விடுதிகள்
மதுரை, திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல் ஆகிய இடங்களில் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகின்றன.
மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி, சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான முதன்மைநிலை விளையாட்டு மைய விடுதி சென்னை நேரு விளையாட்டு அரங்கம், திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் நெல்லையிலும், மாணவிகளுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சென்னை நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் ஈரோட்டிலும் செயல்பட்டு வருகிறது.
தேர்வு போட்டி
மாணவ-மாணவிகளுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது. விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்காக 7, 8, 9 மற்றும் பிளஸ்-1 வகுப்பு, முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் 6,7,8-ம் வகுப்பு சேர்க்கையும் நடைபெறும். மாவட்ட அளவிலான தேர்வுப்போட்டிகள் வருகிற 24-ந் தேதி காலை 7 மணி அளவில் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. நாளை மாலை 5 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம்
ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேர்வு போட்டியின்போது கொண்டு வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய செல்போன் 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தேர்வு போட்டிகளில் கலந்து கொள்ள 24-ந் தேதி காலை 7 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு வர வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.