மகளிர் சுய உதவி குழு பொருள்கள் கண்காட்சி
மகளிர் சுய உதவி குழு பொருள்கள் கண்காட்சி
குண்டடம்
பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தக முன்னிட்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திருப்பூர் மாவட்டம் சார்பில் தாராபுரம் வட்டம் கவுண்டச்சி புதூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கை பொருள் உற்பத்தி செய்யும் மகளிர் சுய உதவி குழு பொருள்கள் கண்காட்சி் நடைபெற்றது. ஊராட்சியின் வறுமை ஒழிப்பு சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்ற தலைவர் செல்வி ரமேஷ் தலைமை தாங்கினார்.இணை இயக்குனர், திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் திருப்பூர் மாவட்டம் வரலட்சுமி, தொப்பம்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர்விமலா கந்தசாமி தொப்பம்பட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார். அப்போது பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக இயற்கை பொருட்களை பயன்படுத்துவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி உறுதிமொழி எடுக்கப்பட்டது.அப்போது பேசிய கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் கொடிய நோய்களைப் பற்றி எடுத்துரைத்தார். மாசற்ற தமிழகத்தை உருவாக்க நாம் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை பொதுமக்களுக்கு கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.இதில்
தாராபுரம், மூலனூர், குண்டடம், பொங்கலூர் வட்டார மேலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், வறுமை ஒழிப்பு சங்க பொறுப்பாளர்கள் மற்றும் சுய உதவி குழுக்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் சமுகநல ஆர்வலர் வி.ரமேஷ் நன்றி கூறினார்.