குடிமராமத்து பணிகளுக்கு மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்


குடிமராமத்து பணிகளுக்கு மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்
x
தினத்தந்தி 7 Sept 2023 12:15 AM IST (Updated: 7 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வாய்மேடு அருகே குடிமராமத்து பணிகளுக்கு மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்

நாகப்பட்டினம்

வாய்மேடு:

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே பஞ்சநதிக்குளம் மேலச்சேத்தியில் வேதாரண்யம் வட்டார விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் ஒளிச்சந்திரன் தலைமை தாங்கினார். சங்க பிரதிநிதிகள் பரமேஸ்வரன், சிங்காரவேலு, மகாசேகர், அறிவுச்செல்வன், அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் நிதி போதுமானதாக இல்லை. விவசாயத்தை காப்பதற்கு மாதம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். வேதாரண்யம் பகுதியில் குடிமராமத்து பணி, வீடு கட்டும் பணிக்கு தேவையான மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். வேதாரண்யம் தாலுகா பகுதியில் உள்ள ஆறுகளில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Next Story