கூலித்தொழிலாளியின் உடல் தோண்டி எடுப்பு


கூலித்தொழிலாளியின் உடல் தோண்டி எடுப்பு
x

சாவில் சந்தேகம் இருப்பதாக தங்கை புகார் அளித்ததன் பேரில், கூலித்தொழிலாளியின் உடல் ேதாண்டி எடுக்கப்பட்டது.

தேனி

கூலித்தொழிலாளி சாவு

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பட்டாபுளித்தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 53). கூலித்தொழிலாளி. கடந்த மாதம் 31-ந்தேதி இவர், பெரியகுளம் வடகரை மயானக்கரை அருகே காயங்களுடன் கிடந்தார்.

இதனைக்கண்ட சேகரின் தங்கை கணவர் ராஜூ, அவரை வீட்டுக்கு அழைத்து வந்தார். அடுத்த நாளிலேயே சேகர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல், பெரியகுளம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் சேகரின் தங்கை சாந்தி, பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது அண்ணன் சேகர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து மர்மச்சாவு என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல் தோண்டி எடுப்பு

இதற்கிடையே சேகரின் உடலை தோண்டி எடுக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா, தாசில்தார் காதர்ஷெரீப், இன்ஸ்பெக்டர் மீனாட்சி ஆகியோர் முன்னிலையில் சேகரின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது.

பின்னர் அவரது உடலை, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர். அந்த அறிக்கை கிடைத்தவுடன் தான், சேகரின் சாவுக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். புதைக்கப்பட்ட கூலித்தொழிலாளியின் உடல் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் பெரியகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story