அகழாய்வு பணிகளை பார்வையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்


அகழாய்வு பணிகளை பார்வையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்
x
தினத்தந்தி 24 Nov 2022 12:15 AM IST (Updated: 24 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் அருகே மயிலாடும்பாறையில் அகழாய்வு பணிகளை அரசு பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.

கிருஷ்ணகிரி

பர்கூர்

பர்கூர் அருகே மயிலாடும்பாறையில் அகழாய்வு பணிகளை அரசு பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.

அகழாய்வு பணி

தமிழக தொல்லியல் துறை, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம்,

மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஆகியவை இணைந்து, உலகமரபு வார விழாவை கடந்த, 19-ந் தேதி தொடங்கி, 25-ந் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொண்டாடி வருகிறார்கள். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம், பெரியபனமுட்லு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் மயிலாடும்பாறைக்கு சென்று அகழாய்வு பணிகளை பார்வையிட்டனர்.

அவர்களுக்கு தொல்லியல் அலுவலர் பரந்தாமன், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் மரபு வார விழா குறித்து விளக்கம் அளித்தனர். மேலும், அகழ்வாய்வு குழியில் உள்ள 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்கு உலையை அக்காலத்தில் மனிதர்கள் எவ்வாறு பயன்படுத்தினார்கள். அதிலிருந்து வெளிவரும் சிறு குழாயில் கொதிக்கின்ற இரும்பு உருகி ஆயுதங்கள் மற்றும் பொருட்களை தயாரித்தனர் என்பது குறித்து விளக்கி கூறினர்.

பரிசு

மாணவ-மாணவிகளின் சந்ேதகங்களுக்கு குழுவினர் பதில் அளித்தனர். தொடர்ந்து, தொல்லியல் துறை சார்பில் பள்ளியில் பேச்சு, கட்டுரை போட்டிகள் நடந்தது. அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், தலைமை ஆசிரியர் ரோகிணி, ஆசிரியர்கள் முனுசாமி, புனிதவதி, புஷ்பலதா, சத்யப்ரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story