ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகளை கவர்னரின் துணை செயலாளர் பார்வையிட்டார்


ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகளை கவர்னரின் துணை செயலாளர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 5:45 PM IST)
t-max-icont-min-icon

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகளை கவர்னரின் துணை செயலாளர் திங்கட்கிழமை பார்வையிட்டார்

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய அரசின் சார்பில், உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் மற்றும் 'சைட் மியூசியம்' அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தமிழக கவர்னரின் துணை செயலாளர் (பல்கலைக்கழகங்கள்) பிரசன்னா ராமசாமி நேற்று நேரில் பார்வையிட்டார்.

அவருக்கு அகழாய்வு பணிகள் குறித்து தொல்லியல் ஆய்வு மாணவர் அருண் எடுத்துரைத்தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், பல்கலைக்கழக தொல்லியல் இயக்குனர் சுதாகர், புவிசார் தொழில்நுட்ப துறைத்தலைவர் சீனிவாஸ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story