ஓசூரில் பகுதி சபை கூட்டம்:பாம்பை காண்பித்து கவுன்சிலர் பேசியதால் பரபரப்பு
கிருஷ்ணகிரி
ஓசூர்
ஓசூர் மாநகராட்சி 42-வது வார்டுக்குட்பட்ட பகுதி சபை கூட்டம், குமரன் நகரிலுள்ள சிறுவர் பூங்காவில் நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் ஜெயப்பிரகாஷ் தலைமை தாங்கினார். மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பு மற்றும் சிவா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் பேசிய கவுன்சிலர் பிளாஸ்டிக் டப்பாவில் 2 பாம்புகளை அடைத்து வந்து கூட்டத்தில் காண்பித்தவாறு பேசினார். அப்போது எனது வார்டு பகுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் மக்கள் உயிருக்கு பயந்த நிலையில் உள்ளனர். பாம்பு பிடி வீரரை மாநகராட்சி சார்பில் நியமிக்க வேண்டும். வார்டு பகுதிகளில் நிலவும் குடிநீர்,, சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று பேசினார். பகுதி சபை கூட்டத்தில் கவுன்சிலர் பாம்புகளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story