மர்மமாக இறந்து கிடந்த 43 ஆடுகளால் பரபரப்பு
மர்மமாக 43 ஆடுகள் இறந்து கிடந்த சம்பவம் பரிதாபத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
சிவகாசி
மர்மமாக 43 ஆடுகள் இறந்து கிடந்த சம்பவம் பரிதாபத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
ஆடுகள் மர்ம சாவு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரநேரி நதிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டைசாமி. இவர் 100-க்கும் அதிகமான ஆடுகளை வளர்த்து வந்ததார். இந்தநிலையில் 4 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையிலான குட்டி ஆடுகளை ஓரிடத்தில் கோட்டைச்சாமி அடைத்து வைத்து பராமரித்து வந்தார். இந்தநிலையில் அங்கிருந்த 43 குட்டி ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
காரணம் என்ன?
இது குறித்து கோட்டைச்சாமி கால்நடை துறைக்கு தகவல் தெரிவித்தார். அதிகாரிகளும், கால்டை டாக்டர்களும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். இறந்து கிடந்த ஆட்டுக்குட்டிகளை ஆய்வு செய்தனர். அப்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் போதிய இட வசதி, காற்றோட்டம் இல்லாததால் ஆடுகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருந்தாலும் சம்பவத்துக்கான காரணத்தை அறிய தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஆடுகள் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பையும், பரிதாபத்ைதயும் ஏற்படுத்தியது.