விநாயகர் கோவிலை இடிக்க முயன்றதால் பரபரப்பு


விநாயகர் கோவிலை இடிக்க முயன்றதால் பரபரப்பு
x

விநாயகர் கோவிலை இடிக்க முயன்றதால் பரபரப்பு

மதுரை


மதுரை விமான நிலையம் செல்லும் சாலை விரிவாக்க பணிகள் செய்வதற்காக நெடுஞ்சாலைத்துறையினர் தெற்குவாசல், வில்லாபுரம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் மதுரை வில்லாபுரத்தில் சாலை ஓரத்தில் உள்ள சங்க விநாயகர் கோவில் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி நெடுஞ்சாலைத்துறையினர் அதனை அகற்றக்கோரி 2 மாதங்களுக்கு முன்பு கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு கோவில் நிர்வாகமும் 15 நாட்களில் அகற்றுவதாக வாக்குறுதி அளித்தது. அதை தொடர்ந்து 2 மாதங்கள் ஆகியும் கோவிலை அகற்றும் பணியில் நிர்வாகம் ஈடுபடவில்லை.

இந்த நிலையில் நெடுஞ்சாலைத் துறையினர் போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் வாகனம் மூலம் நேற்று காலை கோவில் பகுதியை அகற்ற வந்தனர். உடனே கோவிலை இடிக்க உள்ளதாக தகவல் பரவி பக்தர்கள் பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினர் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் கோவில் நிர்வாகம் இன்னும் 2 நாட்களில் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக வாக்குறுதி அளித்தனர். அதை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் அங்கிருந்து சென்றனர். இதனால் வில்லாபுரம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.


Related Tags :
Next Story