வியாபாரி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


வியாபாரி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x

குன்னூர் அருகே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்த போது, வியாபாரி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் அருகே தோட்டக்கலையின் காட்டேரி பூங்காவுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களை நம்பி வியாபாரிகள் சாலையோர கடைகள் அமைத்து உள்ளனர். இந்த கடைகளுக்கு முறையான அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வருவாய்த்துறையினர் அனுமதி இல்லாத கடைகளை பொக்லைன் எந்திரம் உதவியுடன் சில கடைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரி சுப்ரமணியம் திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். உடனே அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வியாபாரிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வியாபாரிகள் காட்டேரி பூங்கா பகுதியில் பல கடைகள் உள்ள நிலையில், சில கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவித்தனர். அதன் பின்னர் வியாபாரிகள் கலைந்து சென்றனர்.


Next Story