சரக்கு ரெயில் மீது நின்று கொண்டு பயணம் செய்தவரால் பரபரப்பு...!
வாணியம்பாடி அருகே சரக்கு ரெயில் மீது நின்று கொண்டு பயணம் செய்தவரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி கன்டெய்னர் சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் மீது மர்மநபர் ஒருவர் நின்று கொண்டு பயணம் செய்வதை பார்த்த பொது மக்கள் வாணியம்பாடி ரெயில்வே நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் வாணியம்பாடி ரெயில் நிலையத்தின் மூன்றாவது நடைமேடையில் ரெயிலை நிறுத்தி பயணிகள் உதவியுடன் அந்த நபரை ரெயில்வே போலீசார் பாதுகாப்பாக மீட்டனர்.
அவரை காப்பாற்றுவதற்காக ரெயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story