ஈரோட்டில் பரபரப்பு தாறுமாறாக ஓடிய கார் அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதியது பேராசிரியர் உள்பட 2 பேர் காயம்
பேராசிரியர் உள்பட 2 பேர் காயம்
பவானியை சேர்ந்த பாலதேவகுரு (வயது 44) என்பவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது காரில் சென்று கொண்டிருந்தார். அந்த கார் ஈரோடு பஸ் நிலையத்தை கடந்து மூலப்பட்டறை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடியது. இதில் சாலையோரமாக நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு வேன், 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதிவிட்டு, மின்கம்பத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் பாலதேவகுரு லேசான காயத்துடன் உயிர் தப்பினார். சரக்கு வேன் டிரைவர் ஜெயபாலனுக்கு (38) காயம் ஏற்பட்டது. அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.இந்த விபத்தில் கார், மினி வேன், 2 மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்தன.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஈரோட்டில் தாறுமாறாக ஓடிய கார் அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதிய விபத்து பரபரப்பை ஏற்படுத்தியது.