அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
குற்றாலத்தில் சாரல் மழை- அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
தென்காசி
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் கடந்த சில நாட்களாக குறைவாக தண்ணீர் விழுந்து வந்தது. இந்தநிலையில் நேற்று காலையில் குற்றாலத்தில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதன் காரணமாக இந்த பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
மேலும், மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் சுமாராக விழுகிறது. இருந்தபோதும், சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. அனைவரும் வரிசையில் நின்று குளிக்க போலீசார் அனுமதித்தனர். இதே நிலை நீடித்தால் குற்றாலத்தில் சீசன் வெகு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து சென்றனர்.
Related Tags :
Next Story