தி.மு.க. செயற்குழு கூட்டம்
தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது
இளையான்குடி,
இளையான்குடி ஒன்றிய, பேரூர் தி.மு.க. செயற்குழு கூட்டம் எம்.எம்.திருமண மஹாலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தொகுதி பொறுப்பாளர் வக்கீல் தினேஷ் கலந்துகொண்டு புதிய உறுப்பினர் படிவத்தை வழங்கி பேசினார்.. மாவட்ட துணை செயலாளர் சேங்கை மாறன் முன்னிலை வகித்தார். தி.மு.க.விற்கு புதிய தொண்டர்களை இணைக்கும் நிகழ்ச்சியாக நிர்வாகிகள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். இதில் ஒன்றிய கழக செயலாளர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன், பேரூராட்சி தலைவர் நஜூமுதின், தமிழ்மாறன், வெங்கட்ராமன், கூட்டுறவு வங்கி தலைவர் தமிழரசன், தலைமை கழக பேச்சாளர் அய்யாசாமி, நெசவாளர் அணி முருகானந்தம், தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசன், விவசாய அணி காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார், இளைஞர் அணி பைரோஸ்கான், சாமிவேல், செய்யதுகான், வக்கீல்கள் கல்யாணி, பார்த்தசாரதி ஒன்றிய, நகர் கழக, சார்பு அணி நிர்வாகிகள், புதிய உறுப்பினர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.