முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு நிர்வாகிகள் வாழ்த்து
அ.தி.மு.க. பொருளாளராக தேர்வு செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
திண்டுக்கல்
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் அ.தி.மு.க. பொருளாளராக, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து திண்டுக்கல் வருகை தந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரதிமுருகன் தலைமையில் நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜ்மோகன், இளைஞரணி செயலாளர் வி.டி.ராஜன், பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி, முரளிதரன், ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் உள்பட அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story