ஜெயக்குமாரை கைது செய்தது ஏன் என்பதை அனைவரும் அறிவர் - அமைச்சர் மா சுப்பிரமணியன்
நீட் தேர்வு விலக்கு குறித்து மத்திய கல்வித்துறை சில விளக்கங்களை தமிழக அரசிடம் கோரியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் மாணவர்களை அலைபேசியில் அழைத்து உளவியல் ஆலோசனை வழங்க அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு குறித்து மத்திய கல்வித்துறை சில விளக்கங்களை கோரியுள்ளது. அதன்படி நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மத்திய அரசுக்கு இரண்டு மூன்று நாட்களில் விளக்கம் அளிக்கப்படும். நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவது என்ற கருத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
மேலும் அவர் கூறுகையில், ஓமந்தூரார் மருத்துவமனையில் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதால், மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளனர். செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பது அவரது குடும்பத்தினர் தனிப்பட்ட விருப்பம், அதில் நாம் தலையிட முடியாதுஜெயக்குமாரை கைது செய்தது ஏன் என்பதை அனைவரும் அறிவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.