பராமரிப்பின்றி வீணாகும் உடற்பயிற்சி சாதனங்கள்


பராமரிப்பின்றி வீணாகும் உடற்பயிற்சி சாதனங்கள்
x

பூதலூர் அருகே பராமரிப்பின்றி வீணாகும் உடற் பயிற்சி சாதனங்களை பாதுகாக்க நடவடிக்்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி;

பூதலூர் அருகே பராமரிப்பின்றி வீணாகும் உடற் பயிற்சி சாதனங்களை பாதுகாக்க நடவடிக்்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளையாட்டு சாதனங்கள்

பூதலூர் ஊராட்சி ஒன்றியம் வெண்டயம்பட்டி கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா என்ற பெயரில் குழந்தைகளை மகிழ்விக்கும் விளையாட்டு சாதனங்கள், இளைஞர்கள், பெண்களுக்கான உடற்பயிற்சி சாதனங்கள் அமைந்த ஒரு அமைப்பு அமைக்கப்பட்டது. 10 ஆயிரம் சதுர அடி பரப்பில் முற்றிலும் 4 பக்கமும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.இந்த பூங்காவின் நடுவில் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கான அதிநவீன சாதனங்கள் மேற்கூரையுடன் அமைந்த ஒரு கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு வந்து பயன்பெறுவர்கள் வசதிக்காக தனித்தனியான கழிவறை வசதியும் தண்ணீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாக்க கோரிக்கை

தற்போது வெண்டயம்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா எந்தவித பராமரிப்பும் இன்றி யாரும் பயன்படுத்தப்படாத நிலையில், அதில் உள்ள குழந்தைகள் விளையாட்டு அமைப்புகள் துருப்பிடித்து காணப்படுகின்றன. மதிப்புமிக்க உடற்பயிற்சி சாதனங்கள் அனைத்தும் பயன்படுத்தப்படாமல் காட்சி பொருளாக காணப்படுகின்றன. சில சாதனங்கள் உடைக்கப்பட்டு காணப்படுகின்றன. இந்த பூங்காவின் நிறைவு பகுதியில் காணப்படும் கழிவறை கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளன.கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் இங்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து உடற்பயிற்சி சாதனங்களை பாதுகாக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story